தமிழக முதல்வர் ஸ்டாலினை நம்பி ஏமாந்து விட்டோம்: அரசு ஊழியர்கள் வேதனை!

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்தமிழக முதல்வர் ஸ்டாலினை நம்பி ஏமாந்து விட்டோம்: அரசு ஊழியர்கள் வேதனை!

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை துரோகத்தை விளைவித்து விட்டார். எல்லாத் துறைகளிலும் கொடுமையை அனுபவிக்கின்ற அரசாணைகள் வெளி வருகிறது எனத் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு சார்பாக  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது, அகவிலைப்படியை உரிய காலத்தில் உடனடியாக வழங்குவது, சரண் விடுப்பை மீண்டும் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இப்போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மு.அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’இன்று தமிழகம் முழுவதும்  அரசு அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கமும் அதன் தலைமையில் செயல்படக்கூடிய 64 துறை  சங்கங்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றன. தமிழ்நாடு முதல்வரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திமுக அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் எங்களுடைய அழைப்பை ஏற்று இரண்டு மாநாடுகளில் பங்கேற்ற முதல்வர், ’’நான் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை மறக்க மாட்டேன் மறைக்கவும் மாட்டேன் மறுக்கவும் மாட்டேன்’’ என்று சொன்னார். அந்த நம்பிக்கையோடு லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் இணைந்து ஜாக்டோ - ஜியோ மாநாட்டை நடத்தி அதிலும் ’’உங்களில் ஒருவன் உங்களால் தான் ஆட்சிக்கு வந்தேன்’’ என்று முதல்வர் கூறினார்.

ஆனால், இந்த 2 ஆண்டு கால கட்டத்தில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாமல் இருக்கக்கூடிய அரசு ஊழியர்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறிக்கக்கூடிய அரசாக மாறி வருகிறது.

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்தமிழக முதல்வர் ஸ்டாலினை நம்பி ஏமாந்து விட்டோம்: அரசு ஊழியர்கள் வேதனை!

தமிழகத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் 30 ஆயிரம் பேர் கோயில்களில் அன்னதானம் வாங்கிச் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். திராவிட மாடல் என்று சொல்லி மத்திய அரசின் கொள்கைகளை எதிர்ப்போம் என சொல்லி, மத்திய அரசை விட தூக்கி சாப்பிடக்கூடிய அளவிற்கு இந்திய நாட்டிற்கே வழிகாட்டுகிற அளவிற்கு ஒட்டுமொத்த உழைப்பாளி அரசு ஊழியர்கள் மீது வன்மத்தோடு செயல்படக் கூடியதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இனி சமாதானம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது, எல்லாத் துறைகளையும் அத்தக் கூலியாக மாற்றி விட்டார்கள். திராவிட மாடல் என்பது அத்த கூலிகள் உருவாக்கக்கூடிய மாடலா? எல்லா துறைகளிலும் நான்கு பேர் பார்க்க வேண்டிய வேலைகளை ஒரு ஆள் பார்க்கின்றனர். அரசு ஊழியர்கள் இந்த ஆட்சிக்கும், நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு பாடம் புகட்டுவார்கள்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in