கோப்பு படம்
கோப்பு படம்

`10 ஆண்டுகளில் அதிமுக அரசு செய்யாததை ஒரே ஆண்டில் சாதித்துள்ளோம்'- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

`10 ஆண்டுகளில் அதிமுக அரசு செய்யாததை ஒரே ஆண்டில் சாதித்துள்ளோம்" என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்காகரூ.37.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிகள் மற்றும்பள்ளிக் கட்டடங்கள் – 6 புதிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தாட்கோ அலுவலகங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேல்நிலைப்பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள உண்டு உறைவிடப்பள்ளிகள், மதுரை மாவட்டத்தில் 2 கள்ளர் சீரமைப்பு உயர்நிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள்,நாகப்பட்டினம், தருமபுரி மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 2 கல்லூரி விடுதிக்கட்டடங்கள் ஆகியவற்றை முதல்வர் திறந்துவைத்தார். மேலும் பல்வேறு துறைகளில் நியமன ஆணை உள்ளிட்டவற்றை முதல்வர் வழங்கினார்.

இதன் பின்னர் சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை அலுவலத்தில் செயல்பட்டு வரும் அவசர கால செயல்பாட்டு மையத்தை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழை பாதிப்பு குறித்தும், மழை தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார். முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், சாத்தூர் ராமச்சந்திரன் உடனிருந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சென்னையை மட்டுமல்ல தமிழ்நாட்டையே சீரழித்து விட்டனர். அதிமுக சீரழித்ததை சரி செய்ய பல ஆண்டுகளாகும். ஆனால் திமுக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. வட சென்னையில் தண்ணீர் தேங்கி இருப்பதாக புகார் வந்திருக்கிறது. தொடர்ந்து அதனை அப்புறப்படுத்தி வருகிறோம். அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் செய்யாததை ஒரே ஆண்டில் செய்து சாதித்துள்ளோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in