'சாவர்க்கர் குறித்த ராகுல்காந்தியின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை' - கொந்தளிக்கும் உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் பாரத் ஜோடோ யாத்திரையில் பேசிய ராகுல் காந்தி, ‘சாவர்க்கர் ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி ஓய்வூதியம் பெற்றவர்’ என குற்றம்சாட்டினார். இதற்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகாராஷ்டிராவில் கூட்டணிக் கட்சிகளாக உள்ளன. இந்த சூழலில் கடந்த செவ்வாய்கிழமையன்று மகாராஷ்டிர மாநிலம் வாஷிமில் நடந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு உதவினார் என்று நான் மிகவும் தெளிவாகக் கூறுகிறேன். அவர் பயத்தின் காரணமாக பிரிட்டிஷாருக்கு கருணை மனுக்களை எழுதினார். ஆங்கிலேயருக்கு சாவர்க்கர் எழுதிய கடிதம் அடங்கிய ஆவணம் என்னிடம் உள்ளது, அதில் 'ஐயா, உங்களின் மிகவும் கீழ்ப்படிந்த பணியாளாக நான் இருக்க வேண்டுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இது நான் எழுதியது அல்ல... ஆனால் சாவர்க்கர் எழுதியது. இந்த ஆவணத்தை அனைவரும் படிக்கட்டும்.

பழங்குடியின தலைவரான பிர்சா முண்டா காங்கிரஸின் அடையாளம். ஆனால் மன்னிப்பு கடிதம் எழுதி ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம் பெற்ற சாவர்க்கர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் அடையாளம்” என தெரிவித்தார்

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, "ராகுல் காந்தியின் கருத்துகளை ஏற்க வேண்டாம். ஸ்வத்யந்திர வீர் சாவர்க்கர் மீது அபரிமிதமான மரியாதை மற்றும் நம்பிக்கையை வைத்திருக்கிறோம். அதை யாராலும்அழிக்க முடியாது. அதே நேரத்தில் பாரத ரத்னா விருது வழங்கும் அதிகாரம் இருந்தும், பிரதமர் மோடி ஏன் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கவில்லை. அதுபோல சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பும் செய்யவில்லை என்பது உண்மை. காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்த பாஜகவுக்கு சாவர்க்கர் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை” என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in