`இனி முல்லை பெரியாறு குறித்து பேச மாட்டேன்'- காரணத்தை சொல்லும் அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்hindu கோப்பு படம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வுப் பணிக்கு இன்று வந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவிற்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வுப் பணிக்கு வந்திருக்கிறார் அமைச்சர் துரை முருகன். நெல்லை மாவட்டம், திடீயூர் பகுதியில் நடந்துவரும் நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகள், பச்சையாறு அணைக்கட்டுப் பகுதிகளையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்த அமைச்சர் துரைமுருகன், “தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்புத் திட்ட பணிகளையும் ஆய்வு செய்தேன். அது பல ஆண்டுகளுக்கு முன்பு நான் அமைச்சராக இருந்தபோது தொடங்கியத் திட்டம். இதற்கு முன்பு அமைச்சராக இருந்தவர் திட்டத்தை நானே திறக்க வேண்டும் என கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

நெல்லை மாவட்டத்தில் நடந்துவரும் நதிநீர் இணைப்புத் திட்ட பணிகள் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முழுதாக நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமிரபரணி நதிநீர் இணைப்புத்திட்டம் அடுத்த ஆண்டு முழுதாக முடிந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும். முல்லை பெரியாறு தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. இனி அதுகுறித்து பேசமாட்டோம். நீதிமன்ற உத்தரவிற்காக காத்திருக்கிறோம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in