அதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சி செய்கிறோம்: பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி

சி.டி.ரவி - அண்ணாமலை
சி.டி.ரவி - அண்ணாமலைஅதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சி செய்கிறோம்: பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி

ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரையும் ஒருங்கிணைக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். வரும் 7்-ம் தேதி வரை நேரம் உள்ளது என்ன முடிவு எடுக்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம் என தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரையும் தனித்தனியாக தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சி.டி.ரவி மற்றும் அண்ணாமலை இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது சி.டி.ரவி பேசுகையில், ‘’ தமிழக மக்களின் நலனுக்காக இருவரும் இணைந்து பணியாற்றுமாறுக் கேட்டுக் கொண்டோம். தமிழக மக்கள் திமுகவிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர். நிச்சயம் இந்த தேர்தலில் திமுக தோல்வியை தழுவும். பிப்.7-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. அதற்கு பாஜகவின் நிலைப்பாட்டை அறிவிப்போம் ’’ என்றார்.

அவரைத்தொடர்ந்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘’ தேசியத் தலைவர் நட்டா ஆலோசனைப்படி நாங்கள் அவர்களைச் சந்தித்தோம். 1972-ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது திமுக ஒரு தீய சக்தி என கூறினார். அதே பாதையில் தான் 2023 - ல் அந்த கட்சி பயணிக்கிறது. தமிழக மக்கள் திமுகவிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.

அதற்காக வலிமையாக தேசிய ஜனநாயக கூட்டணி, உறுதியான அதிமுக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம். ஈரோடு கிழக்கில் திமுக எதிர்க்க வேண்டுமென்றால் வலிமையான வேட்பாளர் வேண்டும். ஒரே அணியாக நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்துள்ளோம் ‘’ என அண்ணாமலை தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in