அதிமுக, பாஜக நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு: ஒப்புக்கொண்ட நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ

அதிமுக, பாஜக நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு: ஒப்புக்கொண்ட நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ

திமுகவோடு கூட்டணி நேர எந்த முகாந்திரமும் இல்லை. அதிமுகவோடு கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என பாஜகவின் நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஷ்ணுவிடம் தொகுதி மேம்பாடு தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மனு கொடுத்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள சாலைகள் குண்டு, குழியாக மோசமாக உள்ளன. அவற்றைச் சீரமைக்க மனுகொடுத்தேன். கங்கை கொண்டான் சிப்காட் பகுதியில் சோலார் பிளான்ட் அமைக்க விவசாய நிலத்தைக் கைப்பற்றுவதற்கு எதிராக அந்த சுற்றுவட்டார விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்தப் பிரச்சினை குறித்து நானும் சட்டப்பேரவையில் இருமுறை பேசி உள்ளேன். அந்த திட்டத்திற்கு விளைநிலங்களை விட்டுவிட்டு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தலாம் எனவும் ஆட்சியரிடம் தெரிவித்தேன்.

அதிமுக, பாஜக நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனாலும் நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். திமுக, பாஜக கூட்டுசேர எந்த முகாந்திரமும் இல்லை. கட்சி மேலிடம் தான் இதுபற்றி முடிவு எடுக்கும் ”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in