`அதிமுக கூட்டணியில் நாங்கள் இல்லை’- பாமக பாலு தடாலடி

`அதிமுக கூட்டணியில் நாங்கள் இல்லை’- பாமக பாலு தடாலடி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக, பாமக செய்தி தொடர்பாளர் பாலு, சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாமக நிலைப்பாடு குறித்து ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற பாமக உயர் நிலை குழு கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை. யாருக்கும் ஆதரவு இல்லை என்று முடிவெடுத்துள்ளோம். பாமகவை பொறுத்தவரை இடைத்தேர்தல் தேவையற்றது. நேர விரையம் சட்டமன்ற உறுப்பினர் மறைந்தால் அந்த கட்சி விரும்பும் நபரை சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்க வேண்டும்.

2021-ம் ஆண்டு நடந்த 9 மாவட்டங்களுக்கான  நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என முடிவெடுத்திருந்தோம். அந்த நிலைப்பாடு தற்போதும் தொடர்கிறது. அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இருப்பதாக  சொல்வது அறியாமையால் ஏற்படும் சந்தேகம் என்றார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு, மூன்று மாதத்திற்கு முன்பு தான் யாருடன் கூட்டணி என்பதை முடிவெடுப்போம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in