வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கப் போகிறோம்! அதிரவைக்கும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

"நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ளன" என்று பிரதமர் மோடி அதிரடியாக கூறினார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தொடராக இது அமையப் போகிறது. சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. குறுகிய கால கூட்டத்தொடர் என்றாலும் தாக்கம் நிறைந்த கூட்டத்தொடராக இருக்கும்.

சில நாட்கள் மட்டுமே நடைபெற்றாலும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டில் உற்சாகமான சூழல் நிலவுகிறது. 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க வேண்டும். பழைய வருத்தங்கள் புகார்களை புறந்தள்ளி உற்சாகத்துடன் புதிய நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு இடம் பெயர்கிறோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in