பாஜக விவகாரத்தில் நாங்கள் எச்சரிக்கையாக உள்ளோம்: போட்டுடைத்த பொன்னையன்

முன்னாள் அமைச்சர் பொன்னையன்
முன்னாள் அமைச்சர் பொன்னையன்பாஜக விவகாரத்தில் நாங்கள் எச்சரிக்கையாக உள்ளோம்: போட்டுடைத்த பொன்னையன்

வடநாட்டில் பாஜக என்னென்ன செய்தது, நட்பு ஆட்சிகளை என்னென்ன செய்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் நாங்கள் பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம் என ஈபிஎஸ் தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் 54 வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதைச் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்னையன், ‘’ வடநாட்டில் பாஜக என்னென்ன செய்தது, நட்பு ஆட்சியை என்னென்ன செய்தார்கள் என்பதை மக்களும், நாங்களும் அறிந்துள்ளோம். அதனால் நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளோம்.

அந்த ஆட்சிகள் எப்படியெல்லாம் கவிழ்ந்தது, ஆட்சியை எப்படியெல்லாம் பிடித்தார்கள் என்பதை எல்லாம் நன்கு அறிந்துள்ளோம்" என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளீர்களா என்ற கேள்விக்கு, "பாஜக உள்ளாட்சித்தேர்தலில் தனித்துதானே போட்டியிட்டார்கள். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். அதனால் பாஜகவும் எங்களை விரும்பலாம் அல்லவா? அவர்களும் எங்களுக்காக பணியாற்றலாம் அல்லவா? காத்திருந்து பாருங்க. திமுக தவிர யார் வேண்டுமானலும் கூட்டணிக்கு வரலாம்’’ என அவர் பதிலளித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக யாருக்கு ஆதரவு அளிக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில், அக்கட்சி குறித்து முன்னாள் அமைச்சர் பொன்னையன் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in