‘நாங்களும் ரவுடிதான்...’ - எச்சரிக்கும் பாஜக தலைவர்!

‘நாங்களும் ரவுடிதான்...’ - எச்சரிக்கும் பாஜக தலைவர்!

எங்கள் கட்சித் தொண்டர்கள் டிஆர்எஸ் தொண்டர்களை விட பெரிய குண்டர்கள். நாங்களும் மக்களின் நலனுக்காக ரவுடித்தனம் செய்வோம் என தெலங்கானா மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பண்டி சஞ்சய் தெரிவித்துள்ளார்.

ஜங்கவுனில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில முதல்வர் சந்திரசேகர் ராவை கடுமையாக சாடிய பாஜக மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய், "பாஜக தொண்டர்கள் மக்கள் நலனுக்காக உழைக்கும் குண்டர்கள். கேசிஆர் குடும்ப உறுப்பினர்கள் அதிகாரம் உள்ளதால் திருடர்கள் போல் அனைத்தையும் ஆக்கிரமித்து வருகின்றனர். பணமும் அதிகாரமும் இருப்பதால் காவல்துறையின் துணையுடன் தாதாகிரி செய்கிறார்கள்.

ஆனால் நாங்கள் உங்களை விட பெரிய குண்டர்கள். பாஜக ஏழைகளுக்காக குண்டாகிரி செய்யும். தெலுங்கானாவை டிஆர்எஸ்சிடமிருந்து காப்பாற்ற, நாங்கள் ரவுடித்தனத்தையும் செய்வோம்" என்று கூறினார்.

தெலங்கானாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆளும் டிஆர்எஸ் கட்சி மீதான தாக்குதலை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. மாநிலத்தில் முதல்முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக முனைந்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in