இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையா?; சிக்கிய பாஜக தலைவரின் மகன்: நடந்தது என்ன?

புல்கிட் ஆர்யா,அங்கிதா பண்டாரி.
புல்கிட் ஆர்யா,அங்கிதா பண்டாரி.

தனது ரிசார்ட்டில் பணிபுரிந்த இளம்பெண்ணை கால்வாயில் தள்ளிக்கொலை செய்த பாஜக மூத்த தலைவரின் மகன் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தராகண்ட் மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா. அவர் அம்மாநில அமைச்சராக இருந்துள்ளார். இவரது மகன் புல்கிட் ஆர்யா. இவர் ரிஷிகேஷ் அருகே ரிசார்ட் நடத்தி வருகிறார். இதில் அங்கிதா பண்டாரி(19) என்ற இளம்பெண் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 18-ம் தேதி வேலை முடிந்து வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அங்கிதாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் காவல் நிலையத்தில் புல்கிட் ஆர்யா மீது அங்கிதா தந்தை புகார் செய்தார். ஆனால், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், தங்கள் மகள் அங்கிதா பண்டாரி காணாமல் போனதற்கு புல்கித் ஆர்யா தான் காரணம் என்றுஅவரது பெற்றோர் சமூக வலைத்தளங்களில் கண்ணீருடன் பேசும் வீடியோவை வெளியிட்டனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து புல்கிட் ஆர்யா உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சியான தகவல் வெளியானது.

சம்பவ நாளான்று புல்கித் ஆர்யாவுக்கும், அங்கிதாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிதாவை அருகில் இருந்த கால்வாயில் தள்ளிக் கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், அங்கிதா பண்டாரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிதா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து புல்கிட் ஆர்யாவிற்குச் சொந்த ரிசார்ட், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என்று கூறி இடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in