அச்சுறுத்தும் மாவோயிஸ்டுகள்... மிசோரம், சத்தீஸ்கரில் நாளை பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு!

சத்தீஸ்கர்
சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. இதில் 12 மாவட்டங்கள், மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தம் 2900 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 650 வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடு விடுதலைக்குப் பின்னர் பழங்குடி மக்கள் முதல் முறையாக வாக்களிக்கும் வகையில் 126 கிராமங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகள் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டன. தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மிசோரம் மக்கள்
மிசோரம் மக்கள்

இதேபோல மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 1276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 765 வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப் பதிவு கண்காணிக்கப்படுகிறது.

மிசோரம் சட்டசபை தேர்தலில் இறுதி கட்ட கருத்து கணிப்பிலும் தொங்கு சட்டசபைதான் என கணிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in