திரிபுராவில் 81% வாக்குப்பதிவு: ஆங்காங்கே வன்முறை; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

திரிபுராவில் 81% வாக்குப்பதிவு: ஆங்காங்கே வன்முறை; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

திரிபுராவில் 60 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவில் 81%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தன. இன்று பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படும்.

திரிபுராவில் இன்றைய வாக்குப்பதிவின் போது சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவானது. இதில் ஒரு சிபிஎம் தலைவர் மற்றும் அக்கட்சியின் இரண்டு வாக்குச்சாவடி முகவர்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். 40-45 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மாணிக் சர்க்கார், பாஜக சார்பில் குற்றவாளிகள், மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க சிரமப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். திப்ரா மோதா தலைவர் பிரத்யோத் டெபர்மாவும் ஆளும் கட்சியை குற்றம் சாட்டினார்.

திரிபுரா தேர்தலில் பாஜக-ஐபிஎஃப்டி கூட்டணி, சிபிஎம் -காங்கிரஸ் கூட்டணி மற்றும் புதிய கட்சியான திப்ரா மோதா ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. திரிபுராவில் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜக 55 இடங்களில் போட்டியிடுகிறது. சிபிஎம் 47 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 13 இடங்களிலும் போட்டியிடுகிறது. முன்னாள் அரச குடும்பத்தின் வாரிசு பிரத்யோத் டெபர்மா தலைமையிலான திப்ரா மோதா கட்சி 42 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 28 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in