அதிமுகவின் கோட்டையை கைப்பற்றியுள்ளாேம்- முதல்வர் ஸ்டாலின் பேட்டி #TnLocalBodyElectionLive

அதிமுகவின் கோட்டையை கைப்பற்றியுள்ளாேம்- முதல்வர் ஸ்டாலின் பேட்டி #TnLocalBodyElectionLive

* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை கைப்பற்றியுள்ளாேம். பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவதுதான் திமுகவின் லட்சியம். தொடர்ந்து எந்த நேரத்திலும் மக்களை சந்திக்க காத்திருக்கிறேன். தயாராக இருக்கிறேன். திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரமாக இந்த வெற்றியை பார்க்கிறேன். திமுக மீதான மக்களின் நம்பிக்கையை 100% காப்பாற்றுவோம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

* தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சியின் 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் பாலமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைக் கேட்டதும் அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

* சென்னை மாநகராட்சியில் அதிமுக 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். திமுக கூட்டணி 110 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றிவிட்டது.

* திருச்சி மாநகராட்சி 20வது வார்டில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவஹர்லால் நேரு தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வெற்றி பெற்றுள்ளார்.

* சென்னை திரு.வி.க.நகர் 72வது வார்டில் போட்டியிட்ட பாடகர் கானா பாலா தோல்வி அடைந்தார். திமுக வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், கானா பாலா 6,095 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்தார்.

* கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி 3வது வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கோபிநாத் வெற்றி பெற்றுள்ளார். இவரிடம் திமுக வேட்பாளர் தோல்வியை தழுவினார்.

* சென்னை மாநகராட்சி 132வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெறும் 8 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். இவர், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

* மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சி 9வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அருண்சுந்தர பிரபு உடனே தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இவரின் இந்த செயல் மேலூர் அதிமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.

* வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றுள்ளார்.

* திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திருச்சி மாநகராட்சியில் 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டன. இந்த 5 வார்டுகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளனர்.

* புதுக்கோட்டை கறம்பக்குடி பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் முகமது இப்ராஹிம்ஷா ஒரு வாக்குகூட பெறவில்லை. இந்த பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் பிருத்விராஜா வெற்றி

* சிவகங்கை மாநகராட்சி 1வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் செங்கோலன் ஒரு வாக்குகூட பெறவில்லை.

* சென்னை மாநகராட்சி 198வது வார்டில் தென்னை மர சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் லியோசுந்தரம் வெற்றி.

* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினை, கட்சியின் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஆ.ராசா, எம்பி தயாநிதி மாறன், முன்னாள் எம்எல்ஏ வாகை சந்திரசேகர் ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

* முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வசிக்கும் எடப்பாடி வார்டில் அதிமுக தோல்வி. சேலம் நெடுஞ்சாலை நகர் 23வது வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி அறிவழகன் வெற்றி

* அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் அதிமுக தோல்வி. பெரும்பான்மை பலத்துடன் திமுக கைப்பற்றியுள்ளது.

* திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், மன்னார்குடி நகராட்சிகள் மற்றும் வலங்கைமான், நீடாமங்கலம், பேரளம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, முத்துப்பேட்டை ஆகிய பேரூராட்சிகளை திமுக தன் வசப்படுத்திக்கொண்டது.

* திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 27 வார்டுகளில் திமுக 15, அதிமுக 4, சுயேச்சை 2 வார்டுகளிலும் வெற்றி. 16வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் மணிமாலா சிலம்பரன் வெற்றி பெற்றுள்ளார்.

* சிவகாசி மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் இதுவரை திமுக 14 வார்டுகளில் வெற்றி, அதிமுக 11 வார்டுகளிலும், விசிக, காங்கிரஸ் தலா ஒரு வார்டிலும், சுயேச்சை 3 வார்டுகளில் வெற்றி

* சென்னை மாநகராட்சியின் 99வது வார்டில் பரிதி இளம்வழுதியின் மகள் பரிதிஇளம்சுருதி வெற்றி

* மொத்தமுள்ள 3,843 நகராட்சி உறுப்பினர்களில் 2,108 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக 1,280, காங்கிரஸ் 84, சிபிஎம் 28, மதிமுக 18, சிபிஐ 14, ஐயூஎம்எல் 10, விசிக 7 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக 341 இடங்களிலும், சுயேச்சைகள் 232 இடங்களிலும், பாஜக 33 இடங்களிலும், பாமக 24 இடங்களிலும், தேமுதிக 13 இடங்களிலும், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.

பேரூராட்சிகள்

* மொத்தமுள்ள 7,605 பேரூராட்சி உறுப்பினர்களில் திமுக கூட்டணி 3,582 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக 2,350, சுயேச்சைகள் 503, அமமுக 36, தேமுதிக 17, மக்கள் நீதி மய்யம் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.

* அதிமுக 589, பாஜக 52, பாமக 32, நாம் தமிழர் கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

* நெல்லை மாவட்டம், களக்காடு நகராட்சியில் 11 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும், 10 வார்டுகளில் திமுகவும், 6 வார்டுகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

* சென்னை மாநகராட்சி 109வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் சுகன்யா வெற்றி

* புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது. 15 வார்டுகளில் 8 வார்டுகளில் அதிமுகவும், 5 வார்டுகளில் திமுகவும், காங்கிரஸ், சுயேச்சை தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

* புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 பேரூராட்சிகளில் 7 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது.

* அரசிராமணி, கோதநல்லூர், தியாகதுருகம், சர்கார் சாமக்குளம், தொண்டாமுத்தூர், நன்னிலம், மணல்மேடு, மல்லாங்கிணறு, காரியாப்பட்டி, கோவை சிறுமுகை, ரீத்தாபுரம், தாளியூர், வெண்ணந்தூர், குத்தாலம், ஓமலூர், கழுகுமலை, பேராவூரணி, மரக்காணம் ஆகிய பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

* சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் தற்போது வரை 12 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 1,8,29,34,49,59,94,115,121,168,174,187 ஆகிய வார்டுகளில் திமுக வெற்றி

* கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 19 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக, சுயேச்சை தலா ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளனர்.

* கோவை மாநகராட்சி 7வது வார்டில் திமுக வேட்பாளர் கோவிந்தராஜு வெற்றி. அதிமுக மேயர் வேட்பாளராக கருதப்பட்ட கிருபாளினி கார்த்திகேயன் தோல்வி

* சென்னை மாநகராட்சி 121வது வார்டில் திமுக வேட்பாளர் மதிவாணன் வெற்றி

* சென்னை மாநகராட்சி 29, 174 ஆகிய வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

* சென்னை மாநகராட்சி 1வது வார்டில் திமுக வேட்பாளர் சிவகுமார், 8வது வார்டில் திமுக வேட்பாளர் ராஜகுமாரி வெற்றி

* புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது.

* கீரமங்கலத்தில் 15 வார்டுகளில் வாக்குகள் எண்ணப்பட்ட 10 வார்டுகளில் திமுக 7, காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி

* திருவாரூர் நகராட்சி 1வது வார்டில் அதிமுக வேட்பாளர்கள் கலியபெருமாளும், 2வது வார்டில் அவரது மனைவி மலர்விழியும் வெற்றி பெற்றுள்ளனர்.

* நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 3வது வார்டில் அமமுக வேட்பாளர் வெற்றி

* கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சியின் 1வது வார்டில் தேமுதிக வெற்றி

* சேலம் மாநகராட்சி 9வது வார்டில் திமுக வேட்பாளர் தெய்வலிங்கம் வெற்றி

* உதகமண்டலம் நகராட்சி 1வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் உமா வெற்றி

* நெல்லை மாநகராட்சி 1வது வார்டில் திமுக வேட்பாளர் கே.ஆர்.ராஜு வெற்றி

* தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பேரூராட்சியின் 1,2வது வார்டுகளில் அமமுக வேட்பாளர்கள் வெற்றி

* வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சியின் 1வது வார்டில் அமமுக வேட்பாளர் வெற்றி

* தூத்துக்குடி கோவில்பட்டி நகராட்சி 3வது வார்டில் அமமுக வேட்பாளர் கருப்புசாமி வெற்றி

* கோவை மாவட்டம், சிறுமுகை பேரூராட்சியின் 2வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி

* நெல்லை மாவட்டம், பணகுடி பேரூராட்சியின் 4வது வார்டில் குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் வெற்றி. அதிமுக, பாஜக வேட்பாளர்கள் இருவரும் 266 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்ததால் குலுக்கல் முறை நடைபெற்றது.

* கோவை மாநகராட்சி 5வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன் வெற்றி

* மதுரை மாநகராட்சி 84வது வார்டில் திமுக வேட்பாளர் போஸ் முத்தையா வெற்றி

* சேலம் இளம்பிள்ளை பேரூராட்சியின் 1வது வார்டில் திமுக வேட்பாளர் கெளரியும், 2வது வார்டில் திமுகவின் லதாவும் வெற்றி

* கோவை, மோப்பிரிபாளையம் பேரூராட்சியின் 1,2 ஆகிய வார்டுகளில் சுயேச்சையும், அன்னூர் பேரூராட்சி 1வது வார்டில் திமுகவும் வெற்றி

* பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சியின் 1வது வார்டில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி

* சமத்தூர் பேரூராட்சியின் 2வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி

* மதுரை மாநகராட்சி 36வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயன் வெற்றி

* கன்னியாகுமரி மாவட்டம், கப்பிறை பேரூராட்சியின் 1வது வார்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி

* சேலம் மாவட்டம், வீரகனூர் பேரூராட்சியின் 1வது வார்டில் அதிமுகவும், 2வது வார்டில் தேமுதிகவும் வெற்றி

* மதுரை மாநகராட்சி 1, 70வது வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் அமுதா தவமணியும், சர்மிளாவும் வெற்றி

* கோவை, காரமடை நகராட்சி 1வது வார்டில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி

* திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூராட்சியின் 3வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி

* நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி 1வது வார்டில் எஸ்டிபிஐ-யின் ஜனத், 3வது வார்டில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் செய்து அலி வெற்றி

* கோவை மாவட்டம், பேரூர் பேரூராட்சியில் 2வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி

* கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பேரூராட்சியின் 1,2 ஆகிய வார்டுகளில் திமுக வெற்றி

* நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியின் 1வது வார்டில் திமுக வெற்றி

* கோவை, வேடப்பட்டி பேரூராட்சி 1வது வார்டில் அதிமுகவும், 2, 3வது வார்டுகளில் திமுகவும் வெற்றி

* திருச்சி சா.கண்ணனூர் பேரூராட்சியின் 1வது வார்டில் திமுக வெற்றி

* தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சியின் 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் கணேஷ் தாமோதரன் வெற்றி

* நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சியின் 2வது வார்டில் சுயேச்சை வேட்பாளரும், 3வது வார்டில் அதிமுக வேட்பாளரும் வெற்றி

* புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேரூராட்சியின் 1வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் சரவணன் வெற்றி

* தென்காசி மாவட்டம், இலஞ்சி பேரூராட்சி முதல் வார்டில் அதிமுக வேட்பாளர் காத்தவராயன் வெற்றி

* திருச்சி கூத்தைப்பார் பேரூராட்சியின் முதல் வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் கவிதா வெற்றி

* புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சி முதல் வார்டில் சுயேச்சை வேட்பாளர் கணேசன் வெற்றி

* திருச்சி, துவாக்குடி நகராட்சி 1, 1வது வார்டில் திமுக வேட்பாளர் ஜெயந்தி 339 வாக்குகள் பெற்று வெற்றி. 2வது வார்டிலும் திமுக வேட்பாளர் வெற்றி. 3வது வார்டில் மதிமுக வேட்பாளர் வெற்றி

* நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி 1வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் பொன்மணி 350 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி

* புதுக்கோட்டை பொன்னமராவதி பேரூராட்சி 1வது வார்டில் திமுக வேட்பாளர் சாத்தையா நாகராஜன் வெற்றி

* திருவாரூர் மாவட்டம், பேரளம் பேரூராட்சியின் 1வது வார்டில் சிபிஎம் வெற்றி

* நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் 1வது வார்டில் திமுகவும், 2வது வார்டில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளது.

* விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோயிலில் சாவி இல்லாததால், தபால் ஓட்டுப்பெட்டி உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

* கடலூர் மாநகராட்சியில், புனித வளனார் பள்ளி மையத்தில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்ததால், வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்தது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. முறைகேடு காரணமாக 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஒரேநேரத்தில், அதிகபட்சமாக 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டு, 14 மேஜைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in