கோயம்புத்தூர் குசும்புக்கு அளவே இல்லையா?... அமைச்சர் டிஆர்பி.ராஜாவுக்கு ஆட்டுக்குட்டியை பரிசளித்த மக்கள்!

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆட்டுக்குட்டியை பரிசளித்த வாக்காளர்கள்
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆட்டுக்குட்டியை பரிசளித்த வாக்காளர்கள்

கோவையில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்திற்கு சென்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு, ஆட்டுக்குட்டி பரிசாக வழங்கப்பட்ட சம்பவம் கலகலப்பூட்டியிருக்கிறது.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கோவை மக்களவைத் தொகுதியில் கணபதி ராஜ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். எனவே வேட்பாளருடன் அமைச்சர் ராஜா, பல்வேறு கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரியன் சின்னம் பொறித்த வேல் பரிசளிப்பு
திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரியன் சின்னம் பொறித்த வேல் பரிசளிப்பு

அந்த வகையில் இன்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக கோவை மருதமலையில் சாமி தரிசனம் மேற்கொண்ட அவர், பின்னர் மருதமலை அடிவாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் பிரச்சாரத்தை துவக்கி மேற்கொண்டார். அப்போது அவருக்கு அமைச்சர் ராஜா மற்றும் கட்சியினர் உதயசூரியன் சின்னம் பொறித்த வேல் ஒன்றை பரிசாக அளித்தார்.

திமுகவினர் அப்போது, ’வெற்றிவேல் வீரவேல்’ என முழக்கமிட்டனர். பழங்குடி மக்களின் வீடுகளுக்கு சென்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் அமைச்சர் ராஜா ஆகியோர் திமுகவின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தனர்.

மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு
மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

அப்போது அப்பகுதி பொதுமக்கள் சார்பில் வேட்பாளர் ராஜ்குமாருக்கு ஆட்டுக்குட்டி ஒன்று பரிசளிக்கப்பட்டது. அதனை ராஜ்குமாருக்கு பதிலாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெற்றுக்கொண்டார். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் சிரிப்பொலி நிலவியது. கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்றே, சுவையான ஆட்டு பிரியாணி தயாராகிக் கொண்டிருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...  

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in