பணப்பட்டுவாடாவை கண்டித்து வாக்குச்சாவடி அருகே வேட்பாளர்கள் போராட்டம்
போராட்டம் நடத்தியவர்கள்

பணப்பட்டுவாடாவை கண்டித்து வாக்குச்சாவடி அருகே வேட்பாளர்கள் போராட்டம்

திண்டுக்கல்லில் தொடர் புகாருக்குப் பிறகும் பணப்பட்டுவாடா நடப்பதாகப் புகார் கூறி அதிமுக உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் வாக்குச்சாவடி அருகே போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் மாநகராட்சித் தேர்தலில் இந்த ஆண்டு திமுக, அதிமுக இரு கட்சிகளும் வாக்காளர்களுக்கு மாறி மாறி பணப்பட்டுவாடா செய்வதாக, புகார் மேல் புகார் வந்தது. 28-வது வார்டில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுக வேட்பாளர் புகார் செய்தார். அப்படியிருந்தும் நேற்றிரவு மீண்டும் பணப்பட்டுவாடா தொடர்ந்தது.

இன்று காலையில், திமுக வேட்பாளர் சார்பில் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கே அழைத்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இதைக்கண்டித்து, அந்த வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், சுயேச்சை வேட்பாளர்களும் வாக்குச்சாவடி அருகே மறியல் போராட்டம் நடத்தினார்கள். பணப்பட்டுவாடா குறித்து புகார் மேல் புகார் தெரிவித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால்தான் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல, மதுரை மாநகராட்சி 94-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பெண் ஒருவர், வாக்குச்சாவடி அருகில் நின்றபடி ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜகவினர் புகார் தெரிவித்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.