அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்கள் வரக்கூடாது: அதிரடி உத்தரவு!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்கள் வரக்கூடாது: அதிரடி உத்தரவு!

நீதிமன்ற கட்டுப்பாடு முடிவடைந்த நிலையிலும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தொண்டர்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சென்னை அதிமுக அலுவலகத்திற்கு ஒரு மாத காலத்திற்கு தொண்டர்கள் வரக்கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று முதல் அதிமுக தொண்டர்கள் தலைமை அலுவலத்திற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இரு தரப்பின் ஆதரவாளர்களும் அலுவலகம் வருவார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஜூலை 11ம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினரிடையே நடந்த வன்முறையில் ஏற்பட்ட சேதம் தொடர்பான ஆதாரங்கள் அப்படியே இருப்பதால், அவை கலைந்துவிடக்கூடாது என்பதற்காக தற்போது அதிமுக தொண்டர்கள் அலுவலகம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன்னதாக, சென்னை வானகரத்தில் ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அப்போது ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் வெடித்தது. இதனால் வருவாய்த் துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சீல் வைத்தனர். இது தொடர்பான வழக்கில் அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க ஜூலை 20ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், வன்முறை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக ஜூலை 21 முதல் ஆகஸ்டு 20ம் தேதி வரை அதிமுக அலுவலகத்தில் தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in