‘5 வருஷம் கழிச்சு இப்போதான் வர்ரீங்க...’ - பாரிவேந்தரை தெறிக்கவிட்ட கிராம மக்கள்

பெரம்பலூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாரிவேந்தர்
பெரம்பலூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாரிவேந்தர்

பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கொளக்குடி கிராமத்தில் ஐஜேக தலைவர் பாரிவேந்தர் இன்று வாக்கு சேகரிக்க சென்றபோது, ‘5 வருஷம் கழிச்சு இன்னிக்குதான் வரீங்க’ என பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்கு சேகரிக்க சென்ற பாரிவேந்தரிடம் கேள்வி எழுப்பிய கிராம மக்கள்
வாக்கு சேகரிக்க சென்ற பாரிவேந்தரிடம் கேள்வி எழுப்பிய கிராம மக்கள்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) சார்பில் பாரிவேந்தர் போட்டியிடுகிறார்.

கடந்த முறை திமுக கூட்டணியில் இதே தொகுதியில் நின்று வெற்றி பெற்ற பாரிவேந்தர், இந்த முறை பாஜக கூட்டணிக்கு மாறியுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தொகுதிக்குள் சூறாவளியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் பாரிவேந்தர். இந்நிலையில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாவட்டம், கொளக்குடி கிராமத்தில் இன்று வாக்கு கேட்டு ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது தொகுதி மக்களுக்கு எந்த நலத்திட்டப் பணிகளும் செய்து தரவில்லை என கிராம மக்கள் அடுக்கடுக்காக குற்றம்சாட்டினர்.

ஐஜேக தலைவர் பாரிவேந்தர்
ஐஜேக தலைவர் பாரிவேந்தர்

இதற்கு பதிலளித்த பாரிவேந்தர் தொகுதியில் மேற்கொண்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து புத்தகம் அடித்து தந்துள்ளேன். அதனை படித்தீர்களா என்று கேட்டார். இருப்பினும் கூட்டத்தில் இருந்த ஒருவர், 'நீங்கள் கேணியை தூர்வாரி தருகிறேன் என்று சொன்னீர்கள். 5 வருஷம் கழிச்சு இன்னிக்குதான் வர்றீங்க" என கூறினார். அப்போது பாரிவேந்தர் கூறுகையில், “நான் வரும்போது நீ எங்கேயோ போயிட்ட" என்றார். இதையடுத்து பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். இதையடுத்து ஐஜேக நிர்வாகிகள் கிராம மக்களை சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும் கூட்டத்தினரிடையே சிறிது நேரம் பேசி வாக்கு சேகரித்துவிட்டு அங்கிருந்து அதிருப்தியுடன் சென்றார்.

வாக்கு சேகரிக்க சென்றபோது வேட்பாளரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in