காங்கிரஸுக்கு குட்பை சொன்ன விஜேந்தர் சிங்... பவ்யமாக பாஜகவில் இணந்தார்!

குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்
குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்

இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இன்று இணைந்தார்.

ராகுல் உடன் விஜேந்தர் சிங்
ராகுல் உடன் விஜேந்தர் சிங்

ஹரியாணா மாநிலம் பிவானி பகுதியை சேர்ந்தவர் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங். இவர், கடந்த 2008-ல் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்றார். அர்ஜுனா, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இந்தியாவின் ஒலிம்பிக் நாயகனான விஜேந்தர் சிங், 2019-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார்.

பாஜகவில் விஜேந்தர் சிங்
பாஜகவில் விஜேந்தர் சிங்

இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிட விஜேந்தர் சிங் வாய்ப்பு கேட்டார். உத்தரப்பிரதேசத்தின் மதுரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜேந்தர் சிங் போட்டியிடலாம் என தகவல் வெளியானது. ஆனால், இறுதியில் அவருக்கு சீட் வழங்க காங்கிரஸ் தலைமை மறுத்துவிட்டது. அதனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் அவர் இன்று பாஜகவில் இணைந்தார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in