‘முதல்வர் மீது அமலாக்கத்துறை ஏன் பாயவில்லை?’ காங்கிரசில் சேர்ந்த சூட்டில் வேகம் காட்டும் விஜயசாந்தி

கேசிஆர் - விஜயசாந்தி
கேசிஆர் - விஜயசாந்தி

பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவியிருக்கும் விஜயசாந்தி, அதே வேகத்தில் பாஜக மற்றும் தெலங்கானாவின் ஆளும் முதல்வர் கேசிஆர் ஆகியோருக்கு எதிராக சீறி வருகிறார்.

பாஜகவில் சீட்டு கிடைக்காத கோபத்தில் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகியிருக்கும் விஜயசாந்தி, கடந்து வந்த அரசியல் பாதை சுவாரசியமானது. தெலுங்கு சினிமாவில் அதகள நாயகியாகவும் கவர்ச்சித் தாரகையாகவும் வலம் வந்த விஜயசாந்தி டோலிவுட்டின் அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்திருக்கிறார். தனது திரைவாழ்க்கையின் உச்சத்தில் ஹீரோ இன்றி தனியாவர்த்தனமாக நடித்தும் வரவேற்பு பெற்றார்.

விஜயசாந்தி - கேசிஆர்
விஜயசாந்தி - கேசிஆர்

திரைவாய்ப்புகள் குறைந்ததன் மத்தியில் 1997-ல் பாஜக பிரவேசம் வாயிலாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் தெலங்கானா இயக்கத்தில் சேர்ந்து, 2009-ல், முந்தைய டிஆர்எஸ் கட்சி சார்பில் எம்பி ஆனார். 2015-ல் தெலங்கானா மாநிலம் பிறப்பதற்கு சற்று முன்னதாக, 2014-ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2019-ல், ’பிரதமர் மோடி சர்வாதிகாரி போல ஆட்சி செய்கிறார்’ என விஜயசாந்தி பேசியது தேசிய அளவில் சர்ச்சையானது.

ஆனால் அடுத்த வருடமே காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்து பாஜகவில் சேர்ந்தார். அரசியல் வாழ்க்கையும் ஒரு வட்டம் என்பதால், மீண்டும் காங்கிரசிலேயே தற்போது சேர்ந்திருக்கிறார். தேர்தல் பரப்புரை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் விஜயசாந்தி, பாஜக மற்றும் பிஆர்எஸ் என இருகட்சிகளையும் ஒருசேரத் தாக்கி வருகிறார்.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவை குறிவைத்திருக்கும் விஜயசாந்தி, ’ராவின் பிஆஎஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் ரகசியத் தொடர்பு இருக்கிறது’ என சாடத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விஜயசாந்தி, “டெல்லியிலிருந்து தெலங்கானா வரும் பாஜக சீனியர் தலைவர்கள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவை ஊழல் மிகுந்த அரசியல்வாதியாக குற்றம்சாட்டுகிறார்கள். அவரது மகள் மீது மதுபான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்; கேசிஆர் கட்சியை குடும்பக் கட்சி என்று தாக்குகின்றனர்.

தெலங்கானாவுக்காக இணைந்து போராடியபோது
தெலங்கானாவுக்காக இணைந்து போராடியபோது

அத்தோடு பாஜக தலைவர்கள் மீண்டும் டெல்லிக்குச் திரும்புகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லோர் மீதும் பாயும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் எதுவும் கேசி ஆர் மீது பாயாதது ஏன்? ஏனெனில், கேசிஆர் - பாஜக இடையே ரகசிய கூட்டணி இருக்கிறது. அதனால்தான் அரசியல் காரணங்களுக்காக கேசிஆரை குற்றம்சாட்டும் பாஜக கேசிஆருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது இருக்கிறது. இப்படி பாஜகவும், கேசிஆர் கட்சியும் ரகசியமாக சேர்ந்திருப்பதே நான் காங்கிரஸ் கட்சியில் சேரக்காரணம்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் கமல் பன்றியை வளர்கிறார்... பிரபல பாடகி ஆவேசம்!

சத்தமில்லாமல் நடந்த மகனின் பட பூஜை... கண்டுகொள்ளாத விஜய்!

பகீர் வீடியோ... 40 தொழிலாளர்களின் உயிர் போராட்டம்... மீட்பு பணிகள் நிறுத்தி வைப்பு!

நாளை உலகக் கோப்பை பைனல்... லட்சங்களில் எகிறிய தங்கும் விடுதி வாடகை!

பரபரப்பு... காங்கிரஸ் வேட்பாளருக்கு விழுந்த செருப்படி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in