விஜயலட்சுமி விவகாரம்; சீமான் மனு மீது இன்று விசாரணை!

சீமான்- விஜயலட்சுமி
சீமான்- விஜயலட்சுமி

நடிகை விஜயலட்சுமி தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை அதனால் விஜயலட்சுமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் வளசரவாக்கம் போலீஸார் வழக்குப்பபதிவு செய்து விசாரணை நடத்தியிருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகினார். இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், நான் இயக்கிய வாழ்த்துகள் என்ற திரைப்படத்தில் வெண்ணிலை என்ற கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி நடித்திருந்தார். அவருடைய அக்கா பிரபல நடிகை ஜெயபிரதாவின் சகோதரரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் விஜயலட்சுமி கேட்டுக் கொண்டதன் பேரில் நான் மனிதாபிமானத்துடன் உதவி செய்தேன்.

அப்போது விஜயலட்சுமிக்கும் எனக்கும் ஆரோக்கியமான பழக்கவழக்கம்தான் இருந்தது. இது எங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதில் மறைக்க எந்த ரகசியமும் இல்லை. என் குடும்பத்தினர், எனக்கு நெருக்கமானவர்களுடனும் விஜயலட்சுமியும் அவருடைய குடும்பத்தினரும் நெருங்கி பழகி வந்தனர்.

சீமான்
சீமான்

இந்த காலகட்டத்தின் போதுதான் விஜயலட்சுமி சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விஜயலட்சுமி என்னை வற்புறுத்தினார். அவருக்கு நல்லது கெட்டது எடுத்துச் சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதனால் நான் அவரை விட்டு விலக முடிவு செய்தேன். இதையடுத்துதான் எனக்கு தொந்தரவு கொடுக்க தொடங்கினார். ஏற்கெனவே 2011 ஆம் ஆண்டும் இதே போல் எனக்கு எதிராக புகார் கொடுத்தார். ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை என்பதால் அந்த வழக்கு வளசரவாக்கம் போலீஸாரால் முடித்துவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் என் மீது புகார் அளிததுள்ளார். எனவே இந்த வழக்கில் ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் இதை முடித்து வைக்க வேண்டும்’’ என சீமான் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in