`எந்த அரசாக இருக்கட்டும், அச்சமின்றி பேசுபவர் விஜய் சேதுபதி'

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேச்சு
`எந்த அரசாக இருக்கட்டும், அச்சமின்றி பேசுபவர் விஜய் சேதுபதி'

``எந்த அரசாக இருந்தாலும் தனது கருத்தை தைரியமாக பேசக்கூடியவர் விஜய் சேதுபதி. அவரது ரசிகன் நான்" என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. வரும் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் பங்கேற்றுள்ளன. இந்த போட்டியை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்றார்.

போட்டியை தொடங்கி வைத்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "ஒரு பொது தொழிலில் இருந்து கொண்டு, தெளிவாக கருத்தை தைரியமாக சொல்லி, அரசாங்கம் யாராக இருந்தாலும் இருக்கட்டும், அப்படி ஒரு தன்மையுடன், சிந்தனையுடன் பேசக்கூடியவர் விஜய் சேதுபதி. தனித்துவமான நடிகர். நானும் விஜய் சேதுபதி ரசிகன்தான்" என்றார்.

Related Stories

No stories found.