விஜய் தற்போது சோதனை காலகட்டத்தில் உள்ளார் - ஹெச்.ராஜா பரபரப்பு பேட்டி!

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

நடிகர் விஜய் தற்போது சோதனை காலகட்டத்தில் உள்ளார் என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக முன்னாள் தேசிய தலைவர் ஹெச்.ராஜா, “நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இல்லத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. அவை யாருக்கு எதிராக பயன்படுத்த வைக்கப்பட்டிருந்தது என தெரிய வேண்டும்.

தமிழக காவல்துறை நாம் தமிழர் கட்சியினர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன். தமிழக காவல்துறையின் அத்துமீறல் நடவடிக்கைகள் பாரபட்ச செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. தமிழக காவல்துறை பாஜகவினரை குறிவைத்து வழக்கு பதிவு செய்கிறது.

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு, 30 ஆண்டு பழமையான கோவிலை இடித்துள்ளார்கள். ஆளும் திமுக அரசு, இந்து மத விரோத அரசாக செயல்படுகிறது. எனவே தமிழக அரசு இந்து விரோத போக்கை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

துப்பாக்கி, வெடி பொருட்கள் போன்றவற்றை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடமிருந்து என்ஐஏ கைப்பற்றி அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது.

எதிர்காலத்தில் பாஜக தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். ஆளுநர் பதவி தேவையா என கூறும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்க்கட்சியாக இருந்தால் ஆளுநர் வாசலிலேயே இருப்பார்கள். ஆளுங்கட்சியாக இருந்தால் ஆளுநர் பதவி வேண்டாம் என மாற்றிப் பேசுவார்கள்.

ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு
ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பதற்கு சில சக்திகள் ஆயுத கடத்தலில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் பெரிய பயங்கரவாத அமைப்புகளை கட்டமைத்து வருகிறார்கள். தமிழகத்தில் தேசிய நடவடிக்கைகள் கட்டமைக்கப்படுகிறது.

தமிழக வெற்றி கழகம் கட்சியை துவக்கியுள்ள விஜய்க்கு வாழ்த்துகள். அவர் தற்போது சோதனை காலகட்டத்தில் உள்ளார். தேர்தல் செயல்பாடுகளுக்குப் பிறகே அவரது நிலை புரியவரும்” என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in