விக்டோரியா கவுரி நியமனம் மதச்சார்பின்மைக்கு எதிரானது: வைகோ ஆவேசம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிக்டோரியா கவுரி நியமனம் மதச்சார்பின்மைக்கு எதிரானது: வைகோ ஆவேசம்

நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனம் செய்யப்பட்டது மதச்சார்பின்மைக்கு எதிரானது என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், " தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணி ஆழமாக கால் ஊன்றியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார்.

உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டது மதச்சார்பின்மைக்கு எதிரானது. அவரது நியமனத்தை திரும்ப பெறவேண்டும் என மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோரிடம் வலியுறுத்தி உள்ளோம்.

விக்டோரியா கவுரி நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். படேல் சிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதோர், பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழலை பாதிக்காத பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான பிரசாரம் தேவையற்றது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in