துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜக்தீப் தங்கார்: பாஜக தேசிய தலைவர் நட்டா அறிவிப்பு!

துணை ஜனாதிபதி வேட்பாளர்  ஜக்தீப் தங்கார்: பாஜக தேசிய தலைவர் நட்டா அறிவிப்பு!

பாஜக, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய குடியரசு துணைத்தலைவரான வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து புதிய குடியரசு துணைத்தலைவரைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன்படி துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்கிறது.

இதில் பாஜக சார்பில் போட்டியிடும் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்ய அக்கட்சியின் பாராளுமன்றம் இன்று கூடியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜக கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவது யார் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்ட அறிவிப்பில், " பாஜக கூட்டணியின் சார்பாக ஜெகதீப் தங்கர் போட்டியிடுவார்" என்றார். ஜெகதீப் தங்கார் தற்போது மேற்கு வங்க ஆளுநராக உள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in