ஆளுநருக்கு எதிராக அஸ்திரம் எடுக்கும் ஸ்டாலின்: தொடங்கியது துணைவேந்தர்கள் மாநாடு

ஆளுநருக்கு எதிராக அஸ்திரம் எடுக்கும் ஸ்டாலின்: தொடங்கியது துணைவேந்தர்கள் மாநாடு

தமிழக பல்கலைக் கழகங்களில் உள்ள துணை வேந்தர்களின் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 22 பல்கலைக் கழகங்கள் உள்ளன. அதில் பணியாற்றும் துணை வேந்தர்கள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் நான் முதல்வன் திட்டத்தைச் செயல்படுத்துதல், உயர்கல்வி நிறுவனங்களுக்கான சிறந்த இடத்தைப் பிடிப்பது, மாநிலக் கல்விக் கொள்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் பாடத் திட்டங்கள் மாற்றுவது, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் உதவித் தொகை திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துதல் உள்ளிட்டவற்றைப் பற்றி ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழக ஆளுநருக்கும், தமிழக அரசிற்கும் பல்கலைக் கழக விவகாரங்களில் தொடர் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஊட்டியில் ஆளுநர் ரவி தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தற்போது நடைபெறும் மாநாட்டில் மா.சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, ரகுபதி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மெய்யநாதன் ஆகிய அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் துணை வேந்தர்கள் மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in