ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பு: என்ன சொல்கிறார்கள் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி!

ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பு: என்ன சொல்கிறார்கள் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி!

ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்து ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி ஆகியோர் பதில் அளித்துள்ளனர்.

சென்னையில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டமும், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து ஈபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "சென்னை உயர் நீதிமன்றத்தால் ஒரு தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பு இறுதியான தீர்ப்பு கிடையாது. எங்கள் தரப்பு வாதத்தில் ஒரு சட்ட ரீதியாகவும் சட்டத்திற்குட்பட்டு கட்சியின் விதிகளில் என்ன குறிப்பிடபட்டிருக்கிறதோ அதன்படிதான் எல்லாம் செய்தோம். ஓபிஎஸ் தரப்புக்கு ஒரு தற்காலிகமான தீர்ப்பு கிடைத்திருக்கிறதே தவிர, இது நிரந்தரம் கிடையாது. மேற்கொண்டு என்ன சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை முடிவு செய்யோம். ஒரு ஆணையரை நியமித்து பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் சொல்லும்போது பொதுக்குழுவுதானே சர்வ அதிகாரம் படைத்தது. அப்படியென்றால் பொதுக்குழுவில் யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறது. எங்களுக்குத்தான் பொதுக்குழுவில் மெஜாரிட்டி இருக்கிறது" என்றார்.

கே.பி.முனுசாமி கூறுகையில், "சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பின்னடைவாக பார்க்கவில்லை. நீதியரசர் ஒரு தீர்ப்பை கொடுத்திருக்கிறார். ஜூலை 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே நடைமுறையில் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். எங்களுடைய கட்சியின் நிர்வாகிகள் அமர்ந்து இதனை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்வார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in