நாடாளுமன்ற வளாகத்தில் வேலுநாச்சியருக்கு சிலை வேண்டும்: 293-வது பிறந்த நாளில் எழுந்த கோரிக்கை

நாடாளுமன்ற வளாகத்தில் வேலுநாச்சியருக்கு சிலை வேண்டும்: 293-வது பிறந்த நாளில் எழுந்த கோரிக்கை

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வீரமங்கை வேலு நாச்சியாரின் 293-வது பிறந்த தினம் சிவகங்கையில் இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. 

ஆங்கிலேய ஏகாதிபத்தியம் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரைக் கொலை செய்து, ஆட்சியை கைப்பற்றியது. இதன் பிறகு, இந்திய சுதந்திரப் போரில் முத்துவடுகநாதரின் மனைவி வேலு நாச்சியார் முதல் முறையாக தலைமை ஏற்றார். இதற்கு திப்பு சுல்தான், கோபால் நாயக்கர் துணை நின்றனர். சிவகங்கையை மீட்பேன் என வேலுநாச்சியார் சபதம் ஏற்று ஆங்கிலேயரை வென்றார். வெள்ளையருடன் போர் புரிந்து இழந்த மண்ணை மீட்ட இந்தியாவின் முதல் பெண்ணான வேலுநாச்சியார் வீரமங்கை என்று பெயர் பெற்றார். இன்று, அவரின் 293-வது பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாப்பட்டது.

இதையொட்டி, சிவகங்கையில் உள்ள வேலுநாச்சியார்  நினைவு மண்டபத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், கலெக்டர் மதுசூதன ரெட்டி, எஸ்.பி செந்தில்குமார், கார்த்திக் சிதம்பரம் எம்பி,  சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ராணி வேலுநாச்சியார் அறக்கட்டளை சார்பில் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்று ஆல்பத்தை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டார். அறக்கட்டளை நிர்வாகிகள் வேலுநாச்சியார் பிறந்ந நாளை மங்கையர் தினமாக அறிக்விக்க வேண்டும். சாதனை பெண்களுக்கு அவரது பெயரில் விருது வழங்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் அவரது சிலை நிறுவ வேண்டும். வேலுநாச்சியாரின் கணவர் முத்து வடுகர் பிறந்த நாளையும் அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in