`குற்றச்சாட்டுக்களில் இருந்து வேலுமணியை விடுவித்துவிட முடியாது'- நீதிபதிகள் கருத்து

`குற்றச்சாட்டுக்களில் இருந்து வேலுமணியை விடுவித்துவிட முடியாது'- நீதிபதிகள் கருத்து

அதன்படி ஆரம்பகட்ட விசாரணை நடத்திய எஸ்.பி. பொன்னி, புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என அறிக்கை அளித்தார். அதற்கு ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பியது. அதை ஆராய்ந்த தமிழக அரசு 2020-ம் ஆண்டு ஜனவரியில் தனக்கு எதிரான நடவடிக்கையை கைவிடுவது என முடிவு எடுத்தது. வழக்குப்பதிவு செய்ய கோரி தான் வழக்கு தொடரப்பட்டது. டெண்டர் வழங்கியதில் முறைகேடு என்றோ, பணிகளை செயல்படுத்தியதில் முறைகேடு என்றோ புகார் கூறப்படவில்லை.

ஒளிவுமறைவற்ற முறையில் டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் வழங்கியதில் தனக்கு எந்த பங்கும் இல்லை. டெண்டர் ஒதுக்கும் குழுவிலும் தான் இடம்பெறவில்லை. அமைச்சர் என்ற முறையில் தனக்கு எதிராகவும், டெண்டர் பெற்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதே தவிர, எந்த அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஆரம்பகட்ட விசாரணையை கருத்தில் கொள்ளாமல், பணிகள் செயல்படுத்தியது தொடர்பான சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து இந்நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளது. வழக்குபதிய கோரி தொடர்ந்த வழக்கில், ஆரம்பகட்ட விசாரணை நடத்த இந்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்வது குறித்தும் இந்த நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர மாநில அரசு அல்ல.

ஆரம்பகட்ட விசாரணைக்கு அரசின் அனுமதி தேவையில்லை. வழக்குப்பதிவு செய்யவும், புலன் விசாரணை மேற்கொள்ளவும் தான் அரசு அனுமதி வேண்டும். முதலில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த மட்டுமே அரசின் அனுமதி பெறப்பட்டது. அதற்கு பிந்தைய ஆரம்பகட்ட விசாரணைக்கும், வழக்குப்பதியவும் அரசின் அனுமதி பெறவில்லை என்பதால் இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும். இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை தவிர வேறு எந்த ஆதாரங்களும் இல்லை. முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அப்போது நீதிபதிகள், போதுமான கால அவகாசம் இருந்தபோதும், அவசரமாக ஏன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது எனக் கேள்வி எழுப்பியதோடு, இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டாலும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக புதிதாக வழக்குப்பதிவு செய்ய முடியும் எனவும் குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவித்துவிட முடியாது எனவும் தெரிவித்தனர்.

சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீது வேலுமணி சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, வழக்கமாக அரசு ஊழியர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதியும் முன், சொத்து விவரங்கள் குறித்து விளக்கம் கேட்கப்படும் எனவும், ஆனால் அரசியல் காரணமாக சொத்துக்கள் விவரங்கள் குறித்து வேலுமணியிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை எனவும் முதல் தகவல் அறிக்கையில் சொத்து விவரங்கள் ஏதும் இல்லை எனவும் உறவினர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களின் வருமானத்தை அடிப்படையாக வைத்து வேலுமணிக்கு எதிராக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதையடுத்து, தமிழக அரசுத்தரப்பு பதில் வாதத்துக்காக மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in