
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் புதுச்சேரி பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
புதுச்சேரி மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து வருபவர் சந்திர பிரியங்கா. இவர் திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு காரைக்காலுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். திருச்சி காவேரி பாலம் அருகே அமைச்சரின் காலம் சென்று கொண்டிருந்தது. அப்போது, அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அமைச்சர் சந்திர பிரியங்கா உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து சம்பவத்துக்கு விரைந்து சென்ற போக்குவரத்து காவலர்கள், அமைச்சர் சந்திர பிரியங்காவை பத்திரமாக மீட்டு புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையின் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.