
இந்திய குடியுரிமை பெற்றுத் தருவதாக கூறி இலங்கைத் தமிழர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றியுள்ளதாக உள்துறை செயலாளரிடம் வீரலட்சுமி புகார் மனு அளித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறை செயலாளர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படையைச் சேர்ந்த வீரலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ சீமான் நல்லவர் போல வேஷம் போடுகிறார். இலங்கையைச் சேர்ந்த தமிழர்களை இந்திய குடியுரிமை வாங்கித் தருவதாக பணம் பறித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆதாரத்துடன் உள்துறை செயலாளரிடம் புகார் மனு அளித்துள்ளோம். எல்லா தேர்தல்களிலும் தோற்கும் நாம் தமிழர் கட்சிக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது. எப்படி தேர்தல் செலவுகளை மேற்கொள்ள முடிகிறது. தற்போது கூட தனது மனைவி பெயரில் கொடைக்கானலில் 6.5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இதெற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது.
சீமான் ஈழத் தமிழர்களை ஏமாற்றி பணம் பறித்து அரசியல் நடத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் என்று பேசுகிறார். அப்படியானால் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா செய்த ஊழல் குறித்து பேசுவாரா? அப்படி அவர் பேசினால் நான் தலைமைச் செயலகம் வாசலில் மொட்டை அடித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!
ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!
அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!
சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!