வீட்டுக் காவலில் விசிக மண்டல செயலாளர்! போலீஸ் திடீர் நடவடிக்கை

வீட்டுக் காவலில் விசிக மண்டல செயலாளர்
வீட்டுக் காவலில் விசிக மண்டல செயலாளர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மண்டல செயலாளர் மாலின் காவல்துறையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மருது சகோதரர்களுக்கு சமூக நல்லிணக்கத்தின் அடிப்படையில் மரியாதை செலுத்துவதற்காக செல்ல அனுமதி கோரிய நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் மதுரை மண்டல செயலாளர் மாலினை மதுரை மாநகர காவல் துறையினர் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். அவரை வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சியினர் காவல்துறைக்கு கோரிக்கையை முன்வைத்து உள்ளனர்.

வீட்டுக் காவலில் விசிக மண்டல செயலாளர் மாலின்
வீட்டுக் காவலில் விசிக மண்டல செயலாளர் மாலின்

இதனிடையே, மதுரை மண்டல செயலாளர் மாலின் தனது எக்ஸ் தளத்தில், "மதுரை அண்ணா நகர் எனது இல்லத்தில் நேற்று இரவில் இருந்து போலீஸ் (ஹவுஸ் அரெஸ்ட்) வீட்டுக் காவலில் உள்ளேன். சுதந்திரப் போராட்ட வீரர் மருதுபாண்டியர் அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுக்கு காளையார் கோவில் செல்ல அனுமதி கடிதம் கொடுத்திருந்தும் காளையார்கோயில் அகமுடையார் சங்கம் அழைப்பின் பேரில் செல்ல இருந்ததை காவல்துறை தடுத்து நிறுத்தி உள்ளது" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in