வருண் காந்தி காங்கிரஸ் கட்சியில் இணையவேண்டும்... தூண்டில் போடும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி!

வருண் காந்தி
வருண் காந்தி

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியின் தற்போதைய பாஜக எம்.பியான வருண் காந்திக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. எனவே, வருண் காந்தி காங்கிரஸில் இணையவேண்டும் என அக்கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “ வருண் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டும். அவர் வந்தால் நாங்கள் மகிழ்ச்சியாக ஏற்போம். அவர் படித்தவர். அவருக்கு கிளீன் இமேஜ் உள்ளது. காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு பாஜக சீட் வழங்க மறுத்துவிட்டது. அவர் காங்கிரஸுக்கு வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

கடந்த சில ஆண்டுகளாகவே வருண் காந்தியை பாஜக ஓரங்கட்டி வருகிறது. இதன் காரணமாக பல சமயங்களில் பாஜகவை வருண் காந்தி கடுமையான விமர்சித்துள்ளார். எனவே பிலிபிட் மக்களவைத் தொகுதியில் வருண் காந்திக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் சுல்தான்பூரில் போட்டியிட அவரது தாயார் மேனகா காந்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறிய உத்தரப் பிரதேச அமைச்சர் ஜிதின் பிரசாதா பிலிபிட் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரசாதா மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தில் இரண்டு முறை அமைச்சராக இருந்தவர். இவர் கடந்த 2021ல் பாஜகவுக்கு தாவினார்.

வருண் ராகுல் காந்தி
வருண் ராகுல் காந்தி

வருண் காந்தி 2009 இல் பிலிபிட் தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டபோது 4.19 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலும் அவர் வென்றார். எனவே அவருக்கு தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது சலசலப்பை உருவாக்கியுள்ளது. ஒருவேளை வருண் காந்தி காங்கிரஸில் இணைந்தால் அது உ.பியில் காங்கிரஸுக்கு பெரும் பலமாக மாறும் என்று கணக்கு போடப்படுகிறது.

80 எம்.பி.க்களை உத்தரபிரதேசத்தில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக இங்கே தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியிடப்படும்.

இதையும் வாசிக்கலாமே...

அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!

'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!

லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!

மீண்டும் ஹிட்டான கேரள பாடல்... வைரலாகும் லுங்கி டான்ஸ் வீடியோ!

'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in