`நாம் கொடுத்த வாக்குறுதி 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு'- பிரதமருக்கு நினைவூட்டும் பாஜக எம்பி

`நாம் கொடுத்த வாக்குறுதி 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு'- பிரதமருக்கு நினைவூட்டும் பாஜக எம்பி

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை அரசுத் துறைகள் லட்சியமாகக் கொண்டு இயங்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ள நிலையில், இது குறித்து பாஜக எம்.பி. வருண் காந்தி வினா ஒன்றை எழுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும், மேகனா காந்தியின் மகனுமான வருண் காந்தி பாஜகவில் உள்ளார். எம்.பி. வருண் காந்தி, தனது கட்சிக்கு எதிராக அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். நேற்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பதிந்திருந்த வீடியோவைப் பாராட்டினார் வருண் காந்தி. இந்நிலையில், பிரதமர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பை விமர்சித்துள்ளார்.

"அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை அரசுத் துறைகள் லட்சியமாகக் கொண்டு இயங்க வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலக ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள வருண் காந்தி, "பிரதமருக்கு நன்றி. வேலையில்லா இளைஞர்களின் வலியையும், உணர்வுகளையும் நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். புதிதாக வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு நாம் 1 கோடி காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் வாக்குறுதி கொடுத்தபடி ஆண்டுக்கு 2 கோடி வேலைகளை உருவாக்க முடியும். அந்த இலக்கை அடைய கூடுதல் வேகத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in