சஞ்சய் காந்தி மருத்துவமனையின் உரிமம் ரத்து... வருண் காந்தி கோரிக்கை!

வருண்காந்தி
வருண்காந்தி

அமேதியில் சஞ்சய் காந்தி மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக மக்களவை உறுப்பினர் வருண் காந்தி, உத்தர பிரதேச அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக உத்தரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சர் பிரகாஷ் பதக்கிற்கு வருண் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், முழுமையான விசாரணை இன்றி மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்வது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது அநீதி என தெரிவித்துள்ளார். இந்த உரிமம் ரத்து செய்யப்பட்டு இருப்பதின் காரணமாக மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளின் சுகாதாரம், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

சஞ்சய் காந்தியின் மகனான வருண் காந்தி, பாஜக சார்பில் உத்தரபிரதேசத்தில் உள்ள பிலிபித் தொகுதியின் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் காந்தி மருத்துவமனை, சஞ்சய் காந்தி நினைவு அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வரும் நிலையில் அதன் தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்து வருகிறார். இந்த அறக்கட்டளையில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in