வன்னி அரசுவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்

வன்னி அரசுவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான வன்னி அரசுவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளராக வன்னி அரசு உள்ளார். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவிற்கு எதிராக கருத்தியல் ரீதியாக பல்வேறு கருத்துகளை வன்னி அரசு முன்வைத்து வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் குறித்தும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.

குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் அரசியல் நிலைபாடு, பேச்சு ஆகியவை குறித்து தொடர்ந்து தனது கருத்தை சமூக வலைதளங்களில் வன்னி அரசு முன் வைத்து வருகிறார். இதன் மீதான எதிர்வினைகளுக்கும் அவர் பதிலளித்து வருகிறார். அத்துடன் ஆர்எஸ்எஸ் பேரணி, 10 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். தனது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் வன்னி அரசு பதிவு செய்து வந்தார். இந்த நிலையில் அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in