வந்தே பாரத் ரயில்கள் வெறும் 14 நிமிடங்களில் இன்று முதல் சுத்தம் செய்யப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் இயக்கப்படும் புல்லட் ரயில்கள் 7 நிமிடங்களில் அதிரடியாக சுத்தம் செய்யப்படுகின்றன அடுத்த ஏழு நிமிடத்தில் அடுத்த பயணத்தை புல்லட் ரயில் தயாராகிறது. இதை பின்பற்றி வந்தே பாரதி ரயில்களையும் 14 நிமிடத்தில் சுத்தம் செய்யும் திட்டம் இன்று அறிமுகமாகிறது.
இந்த திட்டத்தை புதுடெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் துவக்கி வைக்கிறார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘’நாடு முழுவதும் 29 வந்தே பாரத் ரயில்களில் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யும் திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது. சோதனை ஓட்டத்தின் போது 28 நிமிடங்களாக இருந்த சுத்தப்படுத்தும் பணி பின்னர் 18 நிமிடங்களாக குறைந்தது.
தற்போது 14 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் வீதம் அனைத்து பெட்டிகளும் ஒரே நேரத்தில் தூய்மை பணிகள் நடைபெறும். இந்த 14 நிமிடங்களில் ரயில்கள் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு அடுத்த பயணத்திற்கு தயாராகிவிடும் இந்திய ரயில்வே வரலாற்றில் இது முதல் முறையாகும்’’ என அவர் கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!
'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!
எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!
‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!
நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!