தந்தையை இழந்த பெண் குழந்தைகள்... சோகத்தைப் போக்கி தீபாவளி கொண்டாடிய வானதி சீனிவாசன்!

பெண் குழந்தைகளுடன் வானதி சீனிவாசன்
பெண் குழந்தைகளுடன் வானதி சீனிவாசன்

தந்தையை இழந்து அன்னையின் அரவணைப்பில் வளரக்கூடிய 100 பெண் குழந்தைகளுடன் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தீபாவளி கொண்டாடினார்.

கோவை மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பின் சார்பில் நேற்று நடத்தப்பட்ட 'மோடியின் மகள்' எனும் இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு, இனிப்பு ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வழங்கினார்.12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இந்த தன்னார்வ அமைப்பின் சார்பில் கல்வி உதவித் தொகையாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மோடியின் மகள் என்ற திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் தந்தையை இழந்த பெண் குழந்தைகளுடன் தீபாவளி பரிசுகளோடு தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதால், தீபாவளி கொண்டாட்டம், பரிசுகளுடன், குட் டச்” பேட் டச்” குறித்து வகுப்புகள் எடுக்கப்படுகிறது. குற்றங்களில் 50 சதவீதம் பெண்கள் வெளியில் சொல்வதில்லை என்பதால் குற்றவாளிகளுக்கு தைரியம் கிடைக்கிறது. கால விரயம் என்பதாலும் பெண்கள் வெளியில்  சொல்வதில்லை.

ஆளுங்கட்சியிடம் கேட்டுத்தான் ஆளுநர் பேச வேண்டும் என தமிழக அரசில் இருப்பவர்கள் நினைக்கின்றனர். அது நடக்காது. உங்கள் சித்தாந்தங்களை அவர் பேச வேண்டும் என நினைக்கக்கூடாது. அவர் சித்தாந்தத்தை அவர் பேசுகிறார். உங்கள் சித்தாந்தத்தை நீங்கள் பேசுங்கள். ஆளுநரின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட கூடாது" என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in