பாஜக கூட்டணிக்கு அழைத்த வானதி சீனிவாசன்: அதிரடியாக பதில் அளித்த திருமாவளவன்

பாஜக கூட்டணிக்கு அழைத்த வானதி சீனிவாசன்: அதிரடியாக பதில் அளித்த திருமாவளவன்

பாஜக கூட்டணிக்கு விசிக வர வேண்டும் என்று அழைப்பு விடுத்த வானதி சீனிவாசனுக்கு தொல் திருமாவளவன் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், "சகோதரர் தொல் திருமாவளவன் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இருக்கிறது மூலமாக அவர் நினைக்கிற சமூகநீதிக்கோ அல்லது அவர் சார்ந்த பட்டியல் என சமூக மக்களுக்கோ எதுவும் நடக்காது அப்படிங்கிறதை இரண்டு வருட ஆட்சிகாலத்தில் பார்த்துக் கொண்டிருக்காங்க. ஒவ்வொரு முறையும் எந்த ஒரு பட்டியலின பிரச்சினைக்கு கூட அவர்களால் இந்த அரசாங்கத்திலிருந்து தீர்வு காண முடியவில்லை. எதற்காக சகோதரர் அங்கே இருக்கிறார். தொல் திருமாவளவன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழக சமூக நீதிக்கு எதிரான கூட்டணியை விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு வர வேண்டும்" என்று அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சாதிய மதவாத கட்சிகளான பாஜக, பாமக போன்ற கட்சிகளோடு எக்காரணத்தை கொண்டும் ஒரு தற்காலிகமான தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டோம். இந்த நிலைப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றென்றும் உறுதியாக இருக்கும். ஒரு போதும் இந்த நிலைப்பாட்டை நாங்கள் மாற்றிக்கொள்ள மாட்டோம்" என்று அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in