அந்த விஷயம் நீங்க சொல்லித்தான் தெரியும்... வானதி சீனிவாசன் பரபரப்பு!

வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ

டெல்லிக்கு வந்து அதிமுக மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை பிறர் சொல்லியே கேள்விப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், அதிமுக தலைவர்கள் வருகை குறித்து தனக்கு சில மீடியாக்கள் அழைத்து கேட்டதாகவும் தான் பேச்சுவார்த்தையில் உடனிருந்ததாக தவறான செய்தி வெளியிட்டிருக்கின்றனர் என்றும் கூறினார்.

மேலும், நேற்று மாலை முழுவதும் கட்சி பணிகளில் இருந்ததாகவும், தொலைக்காட்சி செய்தியை பார்த்து தான் அதிமுக தலைவர்கள் டெல்லி வந்து இருப்பது தெரியவந்ததாகவும் கூறினார். அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதும் தெரியாது என கூறிய அவர் நான் பேச்சுவார்த்தையின் போது உடன் இருந்ததாக சொல்வது முற்றிலும் தவறான கருத்து என்றார். மகளிர் அணி தலைவராக பிரதமரின் பாராட்டு விழாவை முன்னின்று நடத்துவது தொடர்பாகவே டெல்லி சென்றதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

அதிமுக மூத்த தலைவர் நத்தம் விசுவநாதன்
அதிமுக மூத்த தலைவர் நத்தம் விசுவநாதன்

வானதி சீனிவாசனை தொடர்ந்து டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து பதற்றத்துடன் கார் ஏறி சென்றார். டெல்லியில் முகாமிட்டிருந்த அதிமுகவின் மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, கே.டி.தங்கமணி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in