ஓபிஎஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம்: வைத்திலிங்கம் அறிவிப்பிற்குக் காரணம் என்ன?

ஓபிஎஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம்: வைத்திலிங்கம் அறிவிப்பிற்குக் காரணம் என்ன?

”பொதுக்குழு தீர்மானம் ரத்து செய்யப்பட்டதால் இன்று நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. இரட்டை தலைமைதான் பொதுக்குழு அவைத்தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மிக்கது ” என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஏற்பட்ட களேபரங்கள் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே பொதுக்குழு அரங்கத்தை விட்டு வெளியேறினார். இதைத் தொடர்ந்து அடுத்த பொதுக்குழு நடைபெறும் தேதியைத் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம், “அதிமுகவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளர்தான் அவைத்தலைவரை அறிவிப்பது வழக்கம். எம்ஜிஆர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் இப்படித்தான் நடைபெற்றது.

தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் சேர்ந்துதான் அவைத் தலைவரை அறிவிக்க முடியும். 23 தீர்மானங்களைப் பொதுக்குழு உறுப்பினர்களே ரத்து செய்துவிட்டார்கள். இதனால் பொதுக்குழு உறுப்பினர்களே ரத்தாகி விட்டார்கள். அப்படி இருக்கப் பொதுக்குழு உறுப்பினர் இல்லாமல் எப்படி அவைத்தலைவரைத் தேர்ந்தெடுத்தார்கள்? பேராசை, பதவி வெறி அவர்களின் அறிவை மயக்கி விட்டது. சட்டத்தை மறந்து, நீதிமன்ற உத்தரவை மறந்து இன்றைக்கு அவர்கள் நடத்திய நாடகம் சர்வாதிகாரத்தைக் காட்டிவிட்டது. பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது. அவைத்தலைவருக்கு அதிகாரம் இல்லை.

பொதுக்குழுவில் கலந்து கொண்ட 2500 பேரும் பொதுக்குழு உறுப்பினர்கள் இல்லை. கூலிக்கு மாரடிக்கும் கும்பலும் அதில் கலந்து இருந்தது. பணத்தைக் கொடுத்து சிலரிடம் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். சிலரின் கையெழுத்துகளை அவர்களே போட்டிருக்கிறார்கள். கட்டுப்பாடு இல்லாத காட்டு மிராண்டித் தனமாக ஒரு பொதுக்குழு நடைபெற்று உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கருதுகிறார். ஒருங்கிணைப்பாளர் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம். கட்சி நன்றாக இருக்க வேண்டும். ஜெயலலிதா நினைத்தபடி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நோக்கில் இரட்டை தலைமைதான் தொடர்ந்து இருக்க வேண்டும் ” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in