அப்செட்டில் இருக்கும் வைத்திக்கு ஆளுக்கொரு பக்கம் தூது!

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அவ்வளவாய் ரசிக்கவில்லையாம். “இந்த சந்திப்பு ஓபிஎஸ்ஸுக்கு வேண்டுமானால் பலன் தரலாம் ; எனக்கு இதனால் எந்தப் பலனும் இல்லை” என்று தனக்கு நெருக்கமானவர் களிடம் புலம்பி வரும் வைத்தி, அடுத்து என்ன செய்யலாம் என்கிற அளவுக்கு ஆழ்ந்த யோசனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதைத் தெரிந்துகொண்டு அதிமுக மற்றும் திமுக சைடிலிருந்து போட்டி போட்டுக்கொண்டு வைத்திக்கு சிக்னல் கொடுக்கிறார்களாம். “மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களை மந்திரியாக உட்காரவைத்து அழகுபார்ப்பவர் தளபதி. எனவே, வைத்தியை எதைப்பற்றியும் யோசிக்காமல் திமுகவுக்கு வந்துவிடச் சொல்லுங்கள்” என திமுக தரப்பிலிருந்து வைத்திக்கு நெருக்கமானவர்களிடம் பேசுகிறார்களாம்.

அதுபோலவே அதிமுக தரப்பிலிருந்தும், “இன்னமும் ஓபிஎஸ்ஸை நம்பிக்கொண்டு இருந்தால் வீணாப் போயிருவார் வைத்தி. தாமதிக்காமல் வந்து எடப்பாடியாரைச் சந்திக்கச் சொல்லுங்க. அதிமுகவில் முன்பு என்ன செல்வாக்கோடு இருந்தாரோ அதே செல்வாக்கை மீண்டும் பெறலாம்” என்று வைத்தி வட்டாரத்துடன் பேசுகிறார்களாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in