கடவுள் நண்பரும் இல்லை, பகைவரும் இல்லை: முதல்வர் ஸ்டாலின் குறித்து வைரமுத்து ட்வீட்

கடவுள் நண்பரும் இல்லை, பகைவரும் இல்லை: முதல்வர் ஸ்டாலின் குறித்து வைரமுத்து ட்வீட்

கடவுள் நண்பரும் இல்லை, பகைவரும் இல்லை என்பதே தமிழக முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாடு என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ கடவுள் இல்லை -பெரியார், ஒன்றே குலம், ஒருவனே தேவன் - அண்ணா, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் - கலைஞர்

கடவுள் நண்பரும் இல்லை பகைவரும் இல்லை - மு.க.ஸ்டாலின். இது சமரசமன்று; சமன் செய்தல்” என்று தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு வள்ளலார் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆன்மீகத்துக்கு எதிரான இயக்கம் அல்ல என பேசியிருந்தார். இந்த நிலையில் வைரமுத்து இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in