வைகோவை திடீரென சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

வைகோவை திடீரென சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் திடீரென சந்தித்து பேசிய சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலை, துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வ.உ.சிதம்பரனாரின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், கோவை மத்தியச் சிறையில் வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதற்கு மரியாதை செலுத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ஒரே நேரத்தில் வந்திருந்தனர். அப்போது, வைகோவைத் தேடிச் சென்று பேசினார் வேலுமணி. அவரது கையை பிடித்துக் கொண்ட வைகோ சிறிது நேரம் பேசினார். இருவரும் அப்போது, பரஸ்பரம் நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து வைகோ புறப்பட்டுச் சென்றார். மேலும் அங்கு வந்திருந்த மதிமுகவினருக்கும் வேலுமணி வணக்கம் தெரிவித்தார்.

வைகோவை எஸ்.பி.வேலுமணி திடீரென சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in