`இரண்டு திருக்குறளைச் சொல்லிவிட்டால் தமிழர்கள் ஏமாந்து விடுவார்களா?'- பிரதமரைச் சாடும் வைகோ!

`இரண்டு திருக்குறளைச் சொல்லிவிட்டால் தமிழர்கள் ஏமாந்து விடுவார்களா?'- பிரதமரைச் சாடும் வைகோ!

"திருக்குறளுக்கு நிகரான ஒர் சிந்தனைக் கருவூலம் உலகில் எந்த மொழியிலும் கிடையாது. ஆனால், சாதுர்யமாக பிரதமர் மோடி திருக்குறளை பற்றி பேசுகிறார்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியில் இன்று நடந்த மதிமுக பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் வைகோ கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டார்கள் என்ற செய்தியே கிடையாது. ஆனால், இன்று திருமணமான மூன்று மாதங்களுக்குள் வாழ்க்கை கசந்து விடுகிறது. கணவன்-மனைவி இடையே பிரிவினை ஏற்பட்டு நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற்றுக் கொள்கின்றனர்.

தற்போது, 18 வயதுடைய சிறுவர்கள் தான் கொலை செய்கிறார்கள். சமூகம் மிகவும் கெட்டுப் போய் விட்டது. இதே நிலை நீடிக்குமானால் 10 ஆண்டுகளில் நிலைமை படுமோசமாகி விடும். இவற்றைத் தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "திருக்குறளில் உள்ள கருத்துக்கள் எந்த புத்தகத்திலும் கிடையாது. எந்த மதத்திலும் கிடையாது. திருக்குறளுக்கு நிகரான ஓர் சிந்தனைக் கருவூலம் உலகில் எந்த மொழியிலும் கிடையாது. ஆனால், சாதுர்யமாக பிரதமர் மோடி திருக்குறளைப் பற்றி பேசுகிறார். வட நாட்டில் இருந்து வருபவர்கள் இரண்டு திருக்குறளைச் சொல்லி விட்டால் தமிழர்கள் ஏமாந்து விடுவார்கள் என நினைக்கிறார்கள், அது தவறு" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in