முதல்வர் ஸ்டாலினை மகனுடன் சென்று நேரில் வாழ்த்தினார் வைகோ!

முதல்வர் ஸ்டாலினை மகனுடன் சென்று நேரில் வாழ்த்தினார் வைகோ!

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையடுத்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனது மகனுடன் நேரில் சென்று வாழ்த்தினார்.

சென்னையில் நேற்று நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும், துணைப் பொதுச் செயலாளராகக் கனிமொழியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். "திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தேன்" என்று திருமாவளவன் டவிட் செய்துள்ளார்.

இதனிடையே, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனது மகன் துரை வையாபுரியுடன் சென்னை அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து பொன்னாடை போர்த்தினார். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஐ.பெரியசாமி, கனிமொழி எம்பி மற்றும் மதிமுக மல்லை சத்யா உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in