சனாதன சக்திகளின் ஏஜெண்டாக தமிழக ஆளுநர் செயல்படுகிறார்: வைகோ குற்றச்சாட்டு

வைகோ
வைகோ

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன சக்திகளின் ஏஜெண்ட் போல் செயல்படுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழக ஆளுநர் சனாதன சக்திகளின் ஏஜெண்டாக இருந்து புதியக் கல்விக் கொள்கையை ஆதரித்துப் பேசுகிறார். திருக்குறளையும், தமிழையும் பேசி தமிழ் மக்களை ஏமாற்றிவிட முடியாது. மோடி அரசு பாஜகவின், ஆர்எஸ்எஸ்சின் அஜெண்டாக்களை ஒன்று, ஒன்றாக நிறைவேற்றி வருகிறது. முதலில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தரும் 370-யை நீக்கினார்கள். இப்போது இந்தியையும், சமஸ்கிருதத்தையும் புகுந்த புதியக் கல்விக்கொள்கையைக் கொண்டுவரப் பார்க்கிறார்கள்.

மதச்சார்பற்ற தன்மை, சமூகநீதி இது இரண்டையும் சீர்குலைக்கப் பார்க்கிறது மத்திய மோடி அரசு. இந்தியாவில் சிறந்த ஆட்சியாக ஸ்டாலின் ஆட்சி உள்ளது. இதற்கு எதிராக எதிர்கட்சிகளின் போராட்டங்கள் எடுபடாது ”என்றார். முன்னதாக குழுமியிருந்தவர்களிடம் புத்தாண்டு வாழ்த்துகளை வைகோ பகிர்ந்துகொண்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in