‘நியாயமான முடிவு கிடைக்காவிட்டால் சட்டமன்றத்தைப் புறக்கணிப்போம்’ - வைகைச் செல்வன் பளிச் பதில்!

‘நியாயமான முடிவு கிடைக்காவிட்டால் சட்டமன்றத்தைப் புறக்கணிப்போம்’ - வைகைச் செல்வன் பளிச் பதில்!

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் திமுக அரசியல் செய்து வருகிறது. இதில் நியாயம் கிடைக்காவிட்டால் சட்டமன்றத்தைப் புறக்கணிப்போம் என வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், “பல்வேறு தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளில் வாரிசு முறை என்பது பின்பற்றப்படுகிறது. ஆனால் அதிமுகவில் அப்படியான நிலை இதுவரை ஏற்பட்டதில்லை. கட்சித் தலைவரைக் காலம் தான் தீர்மானிக்கும் என்பது கடந்த கால வரலாறு.  அதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி என்ற எளிய தலைவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் இருக்கிறார்கள். எனவே அவர் விரைவில் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது உறுதி.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்கவேண்டும் என்றும், சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தைக் கண்ணியமாக நடத்தவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளையில், சபாநாயகர் பெரும்பான்மை முடிவின்படி நியாயமாக நடக்கவேண்டும் என்று அ.தி.மு.க. எதிர்பார்க்கிறது. இந்த விவகாரத்தில், தி.மு.க. அரசியல் செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நியாயமான முடிவு கிடைக்காவிட்டால் சட்டமன்றத்தைப் புறக்கணிக்கவும் தயங்கமாட்டோம்." எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in