இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற உத்தராகண்ட் முதல்வர்!

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற உத்தராகண்ட் முதல்வர்!

உத்தராகண்ட் மாநில இடைத்தேர்தலில் போட்டியிட்ட மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்றுள்ளார்.

உத்தராகண்ட்டில் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஹதிமா தொகுதியில் போட்டியிட்ட புஷ்கா் சிங் தாமி தோல்வியைத் தழுவினாா். இருந்தபோதிலும், பேரவைத் தோ்தலில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்தது. இதனால் புஷ்கா் சிங் தாமியை ரை மாநில முதல்வராக்க கட்சித் தலைமை முடிவு செய்தது. இதையடுத்து, தொடா்ந்து இரண்டாவது முறையாக அவா் முதல்வராக பதவியேற்றாா்.

அவ்வாறு பதவியேற்ற நிலையில், அடுத்த 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வாக வேண்டும். இந்நிலையில் சம்பாவத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜகவின் கைலாஷ் கெடோரி, தனது பதவியை ராஜினாமா செய்தாா். இதனால் காலியான அந்தத் தொகுதியில் இடைத்தோ்தல் நடைபெற்றது. அந்தத் தொகுதியில் முதல்வா் புஷ்கா் சிங் தாமி போட்டியிட்டார். இதில் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி அவர் வெற்றி பெற்றுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in