இந்தியாவின் சிறந்த முதல்வர்; முதலிடம் யோகி ஆதித்யநாத்... ஸ்டாலினுக்கு எத்தனையாவது இடம்?

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் யார் என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சர்வே ஒன்றை நடத்தியது.  அதில் இந்தியாவில் சிறந்த  முதல்வர் யார் என்பது குறித்தும் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சிறந்த முதல்வராக மக்கள் டிக் செய்துள்ளனர்.

இந்தியா டுடே மூட் ஆஃப் தி நேஷன் அவ்வப்போது கருத்துக்கணிப்புகளை நடத்தி வருகிறது. இப்படி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் தொடர்ச்சியாக எட்டாவது முறையாக நாட்டின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்.

நாட்டின் சிறந்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு 46.3% பேர் யோகியை தேர்ந்தெடுத்துள்ளனர். இதுவே கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட சர்வேயில் யோகி ஆதித்யநாத்துக்கு 43% ஆதரவு இருந்தது. இப்போது அது மேலும் மூன்று சதவீதம் உயர்ந்துள்ளது. 

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

யோகிக்கு அடுத்த இடத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இருக்கிறார். இருப்பினும் இருவருக்கும் இடையிலான இடைவெளி மிக அதிகமாக  இருக்கிறது. அர்விந்த் கெஜ்ரிவாலை 19.6 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு செய்துள்ளனர். மூன்றாம் இடம் பிடித்திருக்கும் மம்தாவுக்கு 8.4% பேர் வாக்களித்திருக்கிறார்கள்.  5.5% ஆதரவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.

நவீன் பட்நாயக் - ஒடிசா (3%), சித்தராமையா - கர்நாடகா (2.3%) , ஹிமந்த பிஸ்வா சர்மா - அசாம் (2.2%, ஏக்நாத் ஷிண்டே - மஹாராஷ்டிரா (2%), புஷ்கர் சிங் தாமி - உத்தராகண்ட் (0.5%), பூபேந்திர சிங் - குஜராத் (0.4%) ஆகியோர்  அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

தங்கள் சொந்த மாநிலங்களில் எந்த முதல்வருக்குச் செல்வாக்கு அதிகம் என்ற கேள்விக்கு  52.7% ஆதரவுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத் (51.3%), ஹிமந்த பிஸ்வா சர்மா (48.6%) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்,

குஜராத் முதல்வர் பூபேந்திர சிங் (42.6%), திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா (41.4%), கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் (40.1%) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதற்கு முன்பு இந்தப் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் இப்போது 8-வது இடத்தில் உள்ளார். இவருக்கு 36.5% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் 35.8% ஆதரவுடன் ஒன்பதாவது இடத்திலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா 32.% ஆதரவுடன் பத்தாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in